பக்கவாத பராமரிப்பு இல்லத்தில் துளி நற்பணி மன்றம்

74
288

அவுஸ்ரேலியா Melbourne நகரத்தில் வசிக்கும் சந்திரன், உஷா தம்பதிகளின் செல்வப்புதல்வனும், துளி நற்பணி மன்றத்தின் செயற்பாட்டாளருமாகிய துவாரகன் தனது 15வது பிறந்த தினத்தை முன்னிட்டு துளி நற்பணி மன்ற வங்கிக்கணக்கிற்கு 56,000 ரூபாவை அனுப்பிவைத்திருந்தார்.இப்பணத்தில் இருந்து கிளிநொச்சி இரத்தினபுரத்தில் இயங்கும் பக்கவாத பராமரிப்பு இல்லத்தில் உள்ளவர்களின் உணவுத்தேவைக்காக 20,000 ரூபா வழங்கிவைக்கப்பட்டது .அன்றைய தினம் விசேட உணவு வழங்கியதுடன்,இல்லத்தில் உள்ளவர்களுடன் மன்றத்தின் தலைவர் Dr .ப .தவகீதன் ,செயலாளர் சி.யாதவன் மற்றும் பா.சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு நலம் விசாரித்து,கூடி உணவு அருந்தினர் இதையிட்டு இல்லத்தில் உள்ளவர்கள் அகமகிழ்ந்து. துவராகனுக்கு தமது இல்லத்தின் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொண்டனர்.

74 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here