புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை பாராட்டி பரிசளிப்பு விழா

90
314

கிளிநொச்சி மாவட்டத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கூடுதலான மாணவர்கள் சித்தியெய்திய பாடசாலையான கிளி / மத்திய ஆரம்பப்பாடசாலை மாணவர்களையும் ,கிளி மாவட்டத்தில் மாவட்ட ரீதியாக முதல் மூன்று இடங்கைப் பிடித்த மாணவர்களையும் பாராட்டி பரிசளிப்பு விழா 2/12/2016 அன்று கிளி / மத்திய ஆரம்பப்பாடசாலையில் துளி நற்பணி மன்றத்தினரால் நடாத்தப்பட்டது

மேற்படி நிகழ்வானது துளி நற்பணி மன்றத்தின் தலைவர் Dr.ப .தவகீதன் தலைமையில் நடைபெற்றது .இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக
திரு சிற்றம்பலம் கணேசலிங்கம் உதவிக் கல்வி பணிப்பாளர் (ஆரம்பக்கல்வி ) வலயக்கல்வி பணிமனை கிளிநொச்சி
திரு .மகாலிங்கம் பத்மநாதன் உதவிக் கல்வி பணிப்பாளர் (ஓய்வுநிலை) தலைவர் கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்றம் கிளிநொச்சி
திருமதி காஞ்சனா சிவகரன் முதல்வர் கிளி / மத்திய ஆரம்பப்பாடசாலை
திரு இராசரத்தினம் பங்கையற்செல்வன் முதல்வர் கிளி/ வட்டக்கச்சி ஆரம்பப்பாடசாலை
திரு தேவராசா நிகோதரன் ஆசிரியர் கிளி/ வடட்க்கச்சி ஆரம்பப்பாடசாலை
ஆகியோர் கலந்து கொண்டு மாணவர் மத்தியில்சிறப்புரை ஆற்றியதுடன் மாணவர்களை பாராட்டி பதக்கங்களையும் ,சான்றிதழ்களையும் வழங்கிவைத்தனர் .அத்துடன் மாணவர்களுக்கு பரிசாக ஒவ்வொரு மாணவர்களின் பெயரிலும் தலா 2500 ரூபா வங்கியிலிட்டு வங்கிப்புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டது மேற்படி நிகழ்வுக்கான சகல ஒழுங்களுகளையும் மன்ற செயலாளர் சி.யாதவன் உறுப்பினர்களான பா.சசிகரன்,பொ.மணிமாறன் ஆகியோர் சிறப்புற செய்தனர், முழுமையான நிதிப்பங்கப்பினை துளி நற்பணி மன்றத்தின் அவுஸ்ரேலிய sydney நகர அங்கத்தவர்கள் 12பேரும் வழங்கியிருந்தனர்
இவர்களுக்கு துளி நற்பணி மன்றம் சார்பாகவும், கிளி / மத்திய ஆரம்பப்பாடசாலை முதல்வர் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் சார்பிலும் நன்றியைத்தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

 

90 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here