வன்னி விழிப்புலனற்றோர் அங்கத்தவகுடும்ப மாணவர்களுக்கு உதவி

69
275

லண்டன் croydon வசிப்பிடமாகக் கொண்ட மோகனதாஸ் விஜயலசுட்மி தம்பதிகளின் செல்வப்புதல்வன் சத்தியப்பிரகாஸ் தனது 17வது பிறந்ததினத்தை முன்னிட்டு துளி நற்பணி மன்றத்தினுடாக கிளி/பரந்தனில் அமைந்துள்ள வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தில் அங்கம் வகிக்கும் குடும்பங்களில் உள்ள 20 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கையை மேம்படுத்தும் முகமாக சப்பாத்துக்களும், புத்தகப்பையும் சத்தியப்பிரகாசின் தாத்தா ஐ.சண்முகம் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வானது 06/11/2016 அன்று காலை 11 மணிக்கு சங்கத்தின் தலைவர் திரு ரூபராஜ் சத்தியசீலராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் எமது மன்றத்தலைவர் Dr.பசுபதி தவகீதன்,செயலாளர் சி.யாதவன் மற்றும் உறுப்பினரான பா.சசிகரன்,பொ.மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.செல்வன் சாத்தியப்பிரகாஷ் சென்ற ஆண்டு தனது 16வது பிறந்த தினத்தில், முல்லை வள்ளிபுனத்திச் சேர்ந்த 3மாணவர்களுக்கு,ஒவ்வொருவருக்கும் தலா 10000ரூபா, தனியார் கல்வி நிலையக்கட்டணமாக வழங்கியமையும்,இங்கு நினைவு கூறுகின்றோம்.உறவுகளுக்கு உதவும் உள்ளம் கொண்ட,செல்வன் சாத்தியப்பிரகாஸ் அவர்களை,உற்றார் ,உறவினர்களோடு, உதவிகளைப் பெற்ற மாணவர்களும், துளி நற்பணி மன்றமும் பல்கலையும் பெற்று நலமுடனும், வளமுடனும், வாழ வாழ்த்துகின்றோம்.

உறவுகளே!! நீங்களும் துளி நற்பணி மன்றத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் குழந்தைகளின் பிறந்த தினங்களுக்கு நம் தாயக மாணவர்களின் கல்வி வளர்ச்ச்சிக்கு உதவிட வாருங்கள்

 

69 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here