இரு மாணவிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்

35
228

பரந்தன் குமரபுரத்தைச் சேர்ந்த அமரர் நவரத்தினம் நல்லதம்பி அவர்களின் மூன்றாவது ஆண்டு நினைவஞ்சலி தினத்தை முன்னிட்டு சுவிஸ் ஜெனிவாவில் வசிக்கும் அவரது மகள் சிவரூபன் கருணகலா குடும்பத்தினரால் துளி நற்பணி மன்ற வங்கிக்கணக்குக்கு 32260 ரூபா அனுப்பிவைத்திருந்தனர் இப் பணத்திலிருந்து,பெற்றோரை இழந்து துவிச்சக்கர வண்டிகளை வாங்குவதற்கு வசதியின்மை காரணமாக தாங்கள் நீண்ட காலமாக பாடசாலைக்கு பெரும் சிரமத்தின் மத்தியில் நடந்தே செல்வதாகவும் தமக்கு துவிச்சக்கர வண்டிகளை தந்துதவுமாறு துளி நற்பணி மன்றத்திடம் இரு மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இவ் இரு மாணவிகளுக்கும் இன்று 25/12/2016 ஞாயிற்றுக்கிழமை மன்றக்காரியாலயத்தில் வைத்து செயலாளர் யாதவன் தலைமையில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன,அமரர் நவரத்தினம் நல்லதம்பி அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன், இவ் உதவியிணைப்புரிந்த சிவரூபன் கருணகலா குடும்பத்தினருக்கு இரு மாணவிகள் சார்பிலும், துளி நற்பணி மன்றத்தின் சார்பிலும் நன்றிகளை த்தெரிவித்துக்கொள்கின்றோம்.

35 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here