25 மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு

100
758

அவுஸ்ரேலியாவின் perth நகரில் வசிக்கும் ஆவூர் அஸ்வின்,பிரதீஸ்,கமலநாதன்,சிவதர்சன் ஆகிய 4 நண்பர்கள் இணைந்து ஆரம்ப உதவியாக துளி நற்பணி மன்ற வங்கிக்கணக்கிற்கு 35000ரூபாவை அனுப்பி வைத்திருந்தனர்,இப் பணத்திலிருந்து 25 மாணவர்களுக்கு 2017ஆண்டுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கியதுடன், மரம் வளர்ப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஒவ்வொரு மாணவர்களுக்கும் பயன்தரும் மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டது, இந் நிகழ்வானது 21/01/2017 அன்று சனிக்கிழமை கல்மடுநகரில் உள்ள பொதுநோக்கு மண்டபத்தில் துளி நற்பணி மன்றத்தின் 2017ம் ஆண்டுக்கான புதிய தலைவர் பா.சசிகரன் தலைமையில் இடம் பெற்றது. இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக இராமநாதபுரம் கிழக்கு அ.த.க பாடசாலை அதிபர் திரு சுப்பிரமணியம் ரவீந்திரன் மற்றும் கல்மடுநகர் கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் திரு.இ.யோகானந்தராசா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேற்படி நிகழ்வுக்கான சகல ஒழுங்கினையும் மன்றத்தின் செயலாளர் சி,யாதவனுடன் மன்றஉறுப்பினர்களான பொ.மணிமாறன், மயூரன் ஆகியோர் இணைந்து சிறப்புற செய்தனர். மேற்படி நிகழ்வுக்கான நிதி உதவியினை வழங்கிய ஆவூர் அஸ்வின், பிரதீஸ், கமலநாதன், சிவதர்சன் ஆகியோருக்கு மாணவர்கள் சார்பாகவும், துளி நற்பணிமன்றம் சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

 

 

 

 

 

 

 

100 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here