சிறுவர் பாடசாலைக்குமின்சார இணைப்பு

0
118

கல்மடுநகரில் உள்ள கஜந்தா சிறுவர் பாடசாலைக்கு சிறுவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக மின்சார இணைப்பு செய்வதற்கான நிதிஉதவியினை வழங்குமாறு பாடசாலை நிர்வாகத்தினரும் ,பெற்றோரும் துளி நற்பணி மன்றத்திடம் வேண்டியிருந்தனர். இதற்கிணங்க அவுஸ்ரேலியாவின் Melbourne நகரில் உள்ள சந்திரன் துவாரகன் துளி நற்பணி மன்ற வங்கிக்கணக்கிற்கு அனுப்பியிருந்த நிதியில் இருந்து 23000ரூபா வழங்கப்பட்டு மின்சார இணைப்பு செய்து கொடுக்கப்பட்டது. 31/01/2017 அன்று செவ்வாய்கிழமை துளி நற்பணி மன்ற தலைவர் பா.சசிகரன் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் மன்ற செயலாளர் சி. யாதவன் மற்றும் மன்ற உறுப்பினர் பொ.மணிமாறன் ஆகியோருடன் கல்மடுநகர் அ.த.க பாடசாலை அதிபர் திரு கெ.சிறீரங்கன் அவர்களும் கலந்து சிறப்பித்தார் . நிதி உதவியினை வழங்கிய சந்திரன் துவராகனுக்கு துளி நற்பணி மன்றத்தினர் மற்றும்.சிறுவர் பாடசாலை நிர்வாகத்தினரும் பெற்றோரும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here