மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், பயன்தரும் மரக்கன்றுகளும் வழங்கும் நிகழ்வு.

107
736

ஜெர்மனி Essen நகரில் வசிக்கும் சவுந்தரராஜன், கமலினி தம்பதிகளின்செல்வப் புதல்வி சர்விகா அவர்களின் 10வது பிறந்த நாளான இன்று 22/01/2017 ஞாயிற்றுக்கிழமை தாயகத்தில் கல்மடு நகரில் உள்ள 21 பாடசாலை மாணவர்களுக்கு கல்வி மேம்பாட்டிற்காக 2017 ஆண்டுக்கு தேவையான கற்றல் உபகரணங்களும், பயன்தரும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன . இந்த நிகழ்வாவது கிளி/ இராமநாதபுரம் கிழக்கு அ. த. க பாடசாலையில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு. சுப்பிரமணியம் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர் திரு. ம.றோமியல் மற்றும் துளி நற்பணி மன்ற தலைவர் பா.சசிகரன், செயாலாளர் சி. யாதவன் உறுப்பினர்களான பொ.மணிமாறன், பா,சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேற்படி நிகழ்விற்கான நிதியான 25000ரூபாவினை சர்விகாவின் பெற்றோரினால் துளி நற்பணி மன்ற வங்கிக்கணக்கிற்கு அனுப்பியிருந்தனர்.அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்வதுடன்.நோய் நொடியற்று,நலமுடன் பல்கலைபெற்று, உதவி செய்யும் மனப்பாங்குடன் நீண்டகாலம் வாழவேண்டுமென மாணவர்கள் சார்பாகவும் துளி நற்பணி மன்றம் சார்பிலும் சர்விகாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

107 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here