பல வருடங்களாக தொடர்ந்த போர்ச் சூழலினாலும்,இயற்கை அழிவான சுனாமியினாலும் வன்னி மக்களும், மாணவர்களும் பெரும் அழிவுகளையும், இழப்புக்களையும் எதிர் கொண்டனர் இருந்தும் தமது விடாமுயற்சியாலும், சிலர் பலரது உதவியுடனும் மீண்டும் துளிர் விட்டு வரும்போது ,போதைப்பொருள் எனும் கொடிய பூதமும், பாலியல் வன்முறையும் மாணவர்களின் கல்வியில் பெரும் பின்னடைவுகளைக் கொடுக்குமளவுக்கு தலைதுக்கியுள்ளன இவற்றை முறியடித்து. வன்னி மாணவர்கள் கல்வி, விளையாட்டு, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் முன்னேறி சாதனை படைத்திட உதவியும்,ஊக்கமும் கொடுக்கும் நேக்கமாகக் கொண்டே இவ் அமைப்பு தொடங்கப்படுகிறது.நான் படித்துக்கொண்டுடிருப்பதால், தாயகத்தில் எனது செயற்பாடுகளை தொடர்ந்து செய்வதற்காகவும்,மேலும் எனது உறவினர்கள் நண்பர்களையும் இணைத்து வறியமாணவர்களை சரியாக இனம் கண்டு சிந்தாமல் சிதறாமல் உதவிகள் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்திற்கிணங்க நான், துளி நற்பணி மன்றம் என்ற பெயரில் ஒரு அமைப்பை தாயகத்தில் பதிவு செய்துள்ளேன் இவ் அமைப்பினுடாகவே எனது வருங்கால செயற்பாடுகள் அமையும்